மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 நவ 2021

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரலில் 75 சதவிகிதம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அவரது மகனும் கொரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இவருக்கு உள்ளது. அதன்மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை வருமானமும் வருகிறது. இந்த நிலையில் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்டு இருந்தார் அவருடைய இளைய மகன். அதையடுத்து தமிழ் நடிகர் தனுஷ், இந்தி நடிகர் சோனு சூட் போன்றவர்கள் உடனடியாக மருத்துவச் செலவுக்கான உதவியை அளித்தனர்.

இந்த நிலையில் இந்தத் தகவலை அறிந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உதவி செய்திருக்கிறார். சிரஞ்சீவி நடித்த பல படங்களுக்கு சிவசங்கர் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 28 நவ 2021