மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 நவ 2021

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

ஷங்கர் இயக்கும் படம் என்றாலே பிரம்மாண்டம்தான் என்பதும் பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் கடந்தகால வரலாறு. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 காணாமல்போனது. தற்போது ராஜமெளலி இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படம், 400 கோடி ரூபாய் செலவு, 700 கோடி ரூபாய் வியாபாரம் என்கிற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஷங்கர் தன்னை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியுள்ளது. அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின் கதையோட்டத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பாடல் காட்சிகள் இடம்பெறும். அதில் பிரமாண்டமும், கிராபிக்ஸ் காட்சிகள் பொங்கிவழியும். படத்தின் கதையைவிட்டுவிட்டு பிரம்மாண்டத்தின் பெருமைகளை பேச வைப்பது ஷங்கர் கையாண்ட பாணி. தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தற்போது பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த செட்டில் டான்ஸ் ஆடுவதற்காக 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமன் இசையமைத்துள்ள பாடலுக்கு ஜானி நடன இயக்கம் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலுக்கு ராம்சரண் தேஜா மற்றும் கியாரா அத்வானி ஆகிய இருவருடன் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு டான்சர்கள் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்சரண் தேஜா இருவேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுரேஷ்கோபி, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆண்டு மத்தியில் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

சனி 27 நவ 2021