மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

எமோஷனும் ஆக்‌ஷனும் கலந்த ஆர்.ஆர்.ஆர்

எமோஷனும் ஆக்‌ஷனும் கலந்த ஆர்.ஆர்.ஆர்

இந்திய சினிமா எதிர்பார்க்கும் முக்கியமான படம் ஆர்.ஆர்.ஆர். 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை ராஜமெளலி இயக்கியுள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், நடிகர் நடிகைகள் சில படங்களில் நடித்து அப்படம் வெளியாகிவிட்டால் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் ராஜமெளலி அதனை புறக்கணித்தார் என்பதுடன் தமிழ் பதிப்புக்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்புவிடுத்து பங்கெடுத்தார். படத்தை பற்றிய முழுமையான தகவல்களையும் வெளிப்படையாக பேசியது ஆச்சர்யமானதாக பார்க்கப்பட்டது.

லைக்கா புராடக்க்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா & டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தானய்யா இணைந்து வழங்கும், இந்த வருடத்தில் இந்திய சினிமாவில் மிகப்பிரமாண்ட படைப்பாக எதிர்பார்க்கப்படும் படம் ஆர்.ஆர்.ஆர். ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).

பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தி சினிமா நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று காலை சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இயக்குநர் ராஜமௌலி, லைகா சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் என்.வி பிரசாத், தயாரிப்பாளர் தானய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தமிழ்குமரன் பேசுகையில், “ இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைவது எங்களுக்கு பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரமாண்ட படைப்பாக ஆர்.ஆர்.ஆர். இருக்கிறது. இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம்” என்றார்

தயாரிப்பாளர் தானய்யா , “ இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம்” என்றார்

இயக்குநர் ராஜமௌலி , “ சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.

ஆர்.ஆர்.ஆர். படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல்.

அண்ணன் மரகதமணி தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி ஆர்.ஆர்.ஆர். படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

வெள்ளி 26 நவ 2021