மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

வாஸ்கோடகாமா சொல்லும் கதை!

வாஸ்கோடகாமா சொல்லும் கதை!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வாக சமீபத்தில் 100 விஐபிக்கள், 'வாஸ்கோடகாமா' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டனர்.

'நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன், ஆரியா, வெங்கட்பிரபு ,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் ,அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர்,இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார் போன்ற 100 பேர் விநாயகர் சதுர்த்தி அன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் 'வாஸ்கோடகாமா' படத்தை மலேசியாவை சேர்ந்த டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.

படத்தின் பூஜை 25.11.2021 அன்று காலை சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்றது.

இப்பூஜையில் சிறப்புவிருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன் , கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் கூறுகையில், “குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'.

கதாநாயகனாக நகுல் மற்றும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர்” என்றார்

படத்துக்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை என்.வி. அருண்.சண்டைக் காட்சிகள் விக்கி, கலை இயக்கம்- ஏழுமலை, எடிட்டிங் தமிழ்க்குமரன், நடன இயக்குநர் - சாண்டி.

-இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 26 நவ 2021