மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

மீண்டும் ஹீரோவாக யோகி பாபு

மீண்டும் ஹீரோவாக யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

அதேசமயம் கூர்க்கா, கோலமாவு கோகிலா, தர்மபிரபு, மண்டேலா என கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது 'பொம்மை நாயகி' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து முடித்துள்ளார் யோகி பாபு. அறிமுக இயக்குநர் ஷான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

யோகி பாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையால் தடைபட்டது. இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியைப் படக்குழுவினருடன் சேர்ந்து யோகி பாபு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

-அம்பலவாணன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 26 நவ 2021