மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மோகமுள், பாரதியார், பெரியார், ராமானுஜன் படங்களை இயக்கியவர் ஞான ராஜசேகரன். அவரது இயக்கத்தில் தயாராகியுள்ள ஐந்து உணர்வுகள் திரைப்படத்தை வெளியிட தமிழகத்தில் திரையரங்குகள் கிடைப்பதில் உள்ள சிரமத்தைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “எழுத்தாளர் ஆர். சூடாமணி எழுதிய கதைகளின் அடிப்படையில் நான் உருவாக்கிய திரைப்படம் ஐந்து உணர்வுகள். பெண்களின் உணர்வுகளைப் பேசும் இந்தப் படம் நவம்பர் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ப்ளாக் பஸ்டர் படங்களின் ஆக்கிரமிப்பினால் நாங்கள் விரும்பிய விதம் எல்லா நகரங்களிலும் வெளியிட முடியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவது என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

நல்ல திரைப்படங்களை ஆதரிப்பவர்கள் தமிழகத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜன் என்று தொடர்ந்து படங்களை எடுத்திருக்க முடியாது.

என் அன்பான வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். நவம்பர் 26ஆம் தேதி வெளியாகிற ஐந்து உணர்வுகள் திரைப்படத்தைக் குடும்பத்தோடு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக உங்கள் அருகாமையிலுள்ள திரை அரங்குகளில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 26 நவ 2021