மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

முதல் டெஸ்ட்: காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல்!

முதல் டெஸ்ட்: காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல்!

நியூசிலாந்துக்கு எதிராக நாளை (நவம்பர் 25) தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில் நாளை (நவம்பர் 25) கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் முதல் ஆட்டத்திலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகுவதாக பிசிசிஐ தெரிவித்தது.

ஏற்கெனவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

29 வயதான ராகுல் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35.16 சராசரியில் 2,321 ரன்கள் எடுத்துள்ளார். 2016இல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 199 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர்.

-ராஜ்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

புதன் 24 நவ 2021