மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

கமலிடம் நலம் விசாரித்த ரஜினி

கமலிடம் நலம் விசாரித்த ரஜினி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமலின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் போனில் நலம் விசாரித்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகர்களில் முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பவர் நடிகர் கமலஹாசன். கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு லேசான இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதனால் கொரோனா பரிசோதனை செய்ததில் கமலுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கமல்ஹாசனிடம் போனில் உடல் நலம் விசாரித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்பவும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் இறுதியில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார் கமல்ஹாசன்.

இந்த சூழலில் கமலை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடியாது என்பதால் திரையுலக பிரபலங்கள் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தும், விரைவில் நலம்பெறவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

எஸ்.பி. முத்து ராமன், வைரமுத்து, பிரபு, சரத்குமார், சந்தான பாரதி, ஐசரி கணேஷ், ஏ.சி.சண்முகம், ராதா ரவி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, பகத் பாசில், ஞானசம்பந்தன், ராஜேஷ், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களும் கமல் விரைவில் குணமாகித் திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

-இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

புதன் 24 நவ 2021