மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

‘சுருளி’ சென்சார் செய்யப்பட்ட படமா?

‘சுருளி’ சென்சார் செய்யப்பட்ட படமா?

மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘சுருளி’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிரதி அல்ல என்று மத்திய தணிக்கை வாரியத்தின் திருவனந்தபுர மண்டல அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

மலையாள திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு என இவர் இயக்கிய படங்கள் வணிக ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இவர் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வானது .

இந்நிலையில், கடந்த ஆண்டு 19 நாட்களில் ‘சுருளி’ என்ற படத்தை எடுத்து முடித்தார். இப்படம் சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிரதி அல்ல என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

‘சுருளி’ படத்தில் அளவுக்கு அதிகமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியிருப்பதாகப் படத்தைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். தணிக்கை வாரியம் என்ன செய்கிறது என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மத்திய தணிக்கை வாரியத்தின் திருவனந்தபுரம் மண்டல அலுவலர் வி.பார்வதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ ஓடிடி தளமான சோனி லைவ் மூலம் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படமான 'சுருளி' தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட பிரதி அல்ல என்பதைப் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். இது தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல் பரப்பப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

புதன் 24 நவ 2021