மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 நவ 2021

பெண் பார்க்க சொன்ன சிம்பு

பெண் பார்க்க சொன்ன சிம்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படம் நவம்பர் 25 அன்று ரிலீசாக உள்ளது.

அதனையொட்டி சில தினங்களுக்கு முன்பு படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது கலந்து கொண்ட சிலம்பரசன், அதையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மாநாடு படம் தெலுங்கிலும் வெளியிடப்பட உள்ளது.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிலம்பரசன், இந்த படத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே எடுத்தோம். படத்தை சிறப்பாக எடுத்து முடிக்க அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மேலும், நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். இனிமேல் நான் தமிழில் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் தயாராகும் என்றார்.

அப்போது சிலம்பரசனிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது, சிரித்துக்கொண்டே நான் முடியாது என்று கூறவில்லை நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்க என்று சொல்லி பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்து கிளம்பினார்.

- அம்பலவாணன்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

செவ்வாய் 23 நவ 2021