மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 அக் 2021

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

தொண்ணூறுகளில் பூந்தோட்ட காவல்காரன், நல்லவன் உட்பட விஜயகாந்த்தின் படங்களில் நடித்து தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை வாணி விஸ்வநாத்.

தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் அதிக படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2002ல் மலையாள வில்லன் நடிகர் பாபுராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதனால் குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து நீண்ட நாட்கள் ஒதுங்கியிருந்தார்.

2009ல் தனது கணவர் பாபுராஜ் இயக்கிய 'பிளாக் டாலியா' படத்தில் நடித்தார். 2011ல் தயாரிப்பாளராக மாறி தனது கணவர் இயக்கிய மனுஷ்ய மிருகம் படத்தைத் தயாரித்தார். தற்போது தி கிரிமினல் லாயர் என்கிற படத்தில் மீண்டும் தனது கணவர் பாபுராஜூடன் இணைந்து நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஜிதின் ஜித்து என்பவர் இயக்கும் இந்தப்படத்தை வாணி விஸ்வநாத்தே தயாரிக்கவும் செய்கிறார்.

-இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

திங்கள் 25 அக் 2021