Nநாயகியாக நடிக்கும் கோவை சரளா

entertainment

I

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. கடந்த 1979-ஆம் ஆண்டு ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடைசியாக கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் கோவைத் தமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்தார் கோவை சரளா. இன்றைக்கும் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மீண்டும் கதாநாயகியாக கோவை சரளா நடிக்க உள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வாங்கித்தரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு காமெடி காட்சிக்கூட இருக்காது என்று கூறப்படுகிறது.

பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறாராம். ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிக்கொண்டு வரும் இப்படத்தின் கதைக்களம் மலையும் மலைசார்ந்த மக்களைப் பற்றியதாக இருக்கும் என்கின்றனர்.

**அம்பலவாணன் **

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *