Nரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்!

entertainment

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாரான இந்தப் படம் அவரது முந்தைய படம் போலவே பிளாக் காமெடி வகையில் உருவானது.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸுக்குத் தயாரான இந்தப் படம் கொரோனா நேரத்தில் பல்வேறு சிக்கலைச் சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்த விலையும், படத்தின் மீது இருந்த ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அதனால் திரையரங்கில் டாக்டர் படத்தை வெளியிடுவதை தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை. நாயகன் சிவகார்த்திகேயன் ஃபைனான்ஸ் நிலுவைகளைத் தீர்த்து வைக்க லைகா நிறுவன உதவியைப் பெற்று கடந்த மாதம் டாக்டர் படம் வெளியாகி வெற்றி பெற்றது. காமெடியில் கலக்கியுள்ள இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்து வருகின்றனர்.

போட்டிக்குப் படங்கள் இல்லாததால் 700க்கும் மேற்பட்ட திரைகளில் டாக்டர் படம் வெளியானது. அதனால் 50 சதவிகித இருக்கை அனுமதியில் அதிகபட்ச வசூலை திரையரங்குகளில் இந்தப் படம் பெற முடிந்திருக்கிறது. படம் வெளியான 25 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளது. இதை படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டாக்டர் படம் முன்னணி தொலைக்காட்சி சேனலில் வரும் தீபாவளி அன்று ஒளிபரப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

**-அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *