மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 அக் 2021

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!

தமிழ் சினிமாவில் வணிக நோக்கத்திற்காக, பரபரப்புக்காக படத்தின் தலைப்புகள் வைக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி எழுதி வெளியான" நெஞ்சுக்கு நீதி" வரலாற்று ஆவணத்தின் பெயரும் தப்பவில்லை. கருணாநிதியின் பேரனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் மொழி மாற்று படம் ஒன்றுக்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சுக்கு நீதி திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூல் ஆகும். முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969–76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. 1976–88 காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989–96 நிகழ்வுகளை நான்காம் பாகமும் விவரிக்கின்றன.1996–1999 காலகட்டத்தை ஐந்தாம் பாகமும்,1999–2006 வரையிலான நிகழ்வுகளை ஆறாம் பாகமும் விவரிக்கிறது

1924 முதல் 1999 வரை மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த நூலில் 75 ஆண்டுகால இந்திய, தமிழக அரசியல் நிகழ்வுகளின் ஆவணமாகவே இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய பெருமைக்குரிய புத்தகத்தின் தலைப்பை வணிக சினிமாவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்பா மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சர், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் புத்தகம் எழுதியவர் அவருடைய தாத்தா என்பதால் எதிர்ப்புக்குரல் வெளிவராது, வந்தாலும் அடக்கப்படும் என்பது தான் தற்போதைய நிலைமை.

இந்தியில் வெளியான ஆர்ட்டிகள் 15 என்கிற படம் சமகால இந்திய அரசியலையும், புரையோடிப் போன சாதிய அடக்குமுறை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றி பேசும்படமாகும். இந்தப் படத்தில் தமிழாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கின்றார். கானா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.நேற்று

(16.10.2021) அப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையுடன் அடங்கிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்துக்கு “நெஞ்சுக்கு நீதி” என்று தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசை – திபு நினன் தாமஸ்,ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்,

படத்தொகுப்பு – ரூபன்,

கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா,

சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூரின் பேவியூ பிராஜெக்ட்ஸ் வழங்க ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகின்றது.

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

ஞாயிறு 17 அக் 2021