மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ஜகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் அண்ணாத்த. இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவர உள்ள நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர், இரு பாடல்கள் வெளியாகி இருந்தது. ஆயுத பூஜைய முன்னிட்டு நேற்று மாலை படத்தின் டீசர் வெளியானது.

1.44 நிமிடம் ஓடக்கூடிய இந்த முன்னோட்டம் முழுவதிலும் ரஜினிகாந்த் மட்டுமே உள்ளார். சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா பேசிய வசனம் போன்றே "கிராமத்தானை குணமாத் தான பார்த்திருப்ப... கோபப்பட்டு பார்த்தது இல்லையே... காட்டாறு... அவனுக்குக் கரையும் கிடையாது, தடையும் கிடையாது" என்று வசனம் பேசியபடி ஆக்‌ஷனில் இறங்குகிறார்.

ஆங்காங்கே திருவிழா காட்சிகள், ஆக்‌ஷன் என இந்த டீசர் பயணிக்கிறது. டீசரின் முடிவில் "வா சாமி" என ரஜினி கூற, ஒவ்வொரு டிரக் வாகனமும் வெடித்து சிதறுவது போன்று முடித்துள்ளனர்.

இந்த டீசரைப் பார்க்கும்போது என்ன மாதிரியான கதை எனப் புரிந்துகொள்ள முடியவில்லை, அதேசமயம் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறாரோ என்கிற மனநிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. விஸ்வாசம் படத்தில் வரும் பல காட்சிகளை ஆங்காங்கே இந்த முன்னோட்டம் நினைவுப்படுத்துகிறது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் துளிகூட அவர்களது முகங்களைக் காட்டவில்லை. ரஜினி மட்டுமே முன்னோட்டம் முழுக்க வருகிறார்.

தீபாவளி பந்தயத்தில் தனக்கு போட்டியாக வேறு படங்கள் வெளிவராது என்கிற நிலை மாறியுள்ளது. சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு, விஷால் நடித்துள்ள எனிமி என இரண்டு படங்களும் வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி வாரத்தில் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு டிக்கெட் விற்பனை நிகழும். இவற்றில் எந்தப் படம் அதிகளவு சதவிகிதத்தைக் கைப்பற்ற போகிறது என்பதே தற்போதைய நிலைமை.

முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழகத்தில் குறைந்தப்பட்சம் 400 திரையரங்குகள் வரை திரையிடப்படுகிறது. அக்டோபர் 9 அன்று வெளியான டாக்டர் 700க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டது. அதனால்தான் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலானது

அதேபோன்று முதல் வாரத்திலேயே அசலை, வசூலில் கைப்பற்ற தமிழகத்தில் இருக்கும் 1,100 திரைகளில் அதிக திரைகளில் அண்ணாத்த படத்தைத் திரையிட முயற்சி செய்வார்கள். அதற்கு ரஜினிகாந்த் என்கிற முகத்தை முழுமையாக முன் நிறுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால் முன்னோட்டத்தில் ரஜினிகாந்த் நிறைந்திருக்கிறார்.

- அம்பலவாணன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 15 அக் 2021