ஆயூத பூஜைக்கு அண்ணாத்த டீசர்!

entertainment

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் தயாராக உள்ள வலிமை படம் தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் என கூறிவந்த நிலையில் கொரோனா முடக்கத்தில் இருந்து சினிமா மீண்டு வருகிற குழலில் ரஜினிகாந்த் – அஜித்குமார் நேரடி மோதல் வேண்டாம் என சினிமா வியாபாரிகள் மட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதால் வலிமை தீபாவளிக்கு வெளியாகவில்லை

இருப்பினும் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு, விஷால் நடித்துள்ள எனிமி என இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 14, ஆயுத பூஜை அன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *