மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 அக் 2021

போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா : ரசிகர்கள் கொந்தளிப்பு!

போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா : ரசிகர்கள் கொந்தளிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமாக்காரர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாராதான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என கூறப்படுகிறது. அவரது தனித்தன்மைக்காக தமிழில் எந்தப் படமும் வெற்றிபெற்றதில்லை, கோபி நயினார் இயக்கத்தில் வெளியான கதை உள்ளடக்கத்திற்காக படம் வெற்றிபெற்றது. இதில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா, அட்லி இயக்கும் படத்தில் நாயகியாக இந்தி திரையுலகில் பிரவேசிக்கின்றார். இதில், ஷாருக்கான் நாயகனாக நடிக்கின்றார்.

அவர் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும், அவரை சுற்றிவந்த காதல் சர்ச்சைகள் காரணமாக இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அப்புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர். அதே சமயம் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ரசிகர்கள் கூறியிருப்பதாவது, போர்ப்ஸ் போன்ற பெரிய பத்திரிகையின் அட்டைப் படத்தை பார்த்தால் போட்டோஷாப் செய்தது போன்று மோசமாக இருக்கிறது. நயன்தாராவை ஒழுங்காகவே புகைப்படம் எடுக்கவில்லை. அவர் வேறு யார் மாதிரியோ தெரிகிறார். அவருக்கு அளித்திருக்கும் உடையும் மோசம். ஒரு லேடி சூப்பர் ஸ்டாரை இப்படித்தான் மோசமாக காட்டுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அம்பலவாணன்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

செவ்வாய் 12 அக் 2021