மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ஆர்யன் கான்: ஆறுதல் சொன்ன ஹிருத்திக்- எதிர்த்த கங்கனா

ஆர்யன் கான்: ஆறுதல் சொன்ன ஹிருத்திக்- எதிர்த்த கங்கனா

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தவே, ஆர்யன் கைது செய்யபட்ட தகவல் அறிந்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நள்ளிரவில் வந்தடைந்த ஷாருக்கானை சில மணிநேரத்தில், சல்மான்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கானும் நேரில் சந்தித்துள்ளனர்.

இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆர்யன் கானுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவரது பதிவில், ''குழந்தையாகவும், பெரியவனாகவும் உன்னை எனக்கு தெரியும். உன் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களெல்லாம் உனக்கானது. அது உன்னுடைய கிஃப்ட். என்னை நம்பு. இந்த புள்ளிகளையெல்லாம் சேர்த்து பார்க்கும்போது அது உனக்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கும். அழுத்தத்தை உணரும்போது நீ தேர்ந்தெடுக்கப்படுகிறாய். நீ அதை உணர வேண்டும். கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை இவையாவும் உனக்குள் இருக்கும் ஹீரோவை எரித்துவிடும். இருளுக்குள் இருக்கும்போது ஒளியை நம்பு. அது உள்ளுக்குள்ளே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இறுதியாக, 'லவ் யூ மேன்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா ராணாவத், இப்போது அனைத்து மாஃபியா பப்புவும் ஆர்யன் கானுக்கு ஆதரவாக வருகிறார்கள். தவறு செய்திருக்கிறார். அதை மகிமைப்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் ஆர்யனுக்கு புதிய கோணத்தை காட்டியிருக்கும் என நம்புகிறேன். ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகளை அவருக்கு உணர வைத்திருக்கும். இது அவரை சிறந்தவனாகவும் பெரியவனாகவும் மாற்றும். ஒருவர் பாதிக்கப்படும்போது அவர்களைப் பற்றி கிசுகிசுக்காமல் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது குற்றமாகும் என்று பதிவிட்டுள்ளார்.

அம்பலவாணன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 8 அக் 2021