மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

பெண்களின் மவுனத்துக்கு தான் சக்தி அதிகம்: ஜோதிகா

பெண்களின் மவுனத்துக்கு தான் சக்தி அதிகம்: ஜோதிகா

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடித்துள்ள படம் ‛உடன்பிறப்பே'. ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள இப்படம் அண்ணன் - தங்கை இடையேயான பாச படமாக, குடும்பங்கள் ரசிக்கும் படமாக தயாராகி உள்ளதாக கூறுகிறார் ஜோதிகா.

அண்ணனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். அக்டோபர்14ல் ஓடிடியில் இப்படம் வெளியாகிறது. ஜோதிகா நடிப்பில் வெளியாகும் 50 வது திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகும் படத்திற்கு இணையாக உடன்பிறப்பே படத்திற்கான விளம்பர ஏற்பாடுகளை 2D நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.

இதனையொட்டி ஜோதிகா பத்திரிகையாளர்களை சந்தித்தபோது,

"என் சினிமா பயணம் அழகானது. இந்த நேரத்தில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒருவர் பிரியதர்ஷன் மற்றொருவர் வசந்த். எதுவும் புரியாத வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என் கையை பிடித்துக் கொண்டு சூர்யா அழைத்து போனார். வாழ்கையிலும், சினிமாவிலும் இங்கே நிறைய கற்றுக்கொண்டேன்.

புதிய இயக்குனர்களிடம் நிறைய கதைகள் கேட்டேன். முடிந்தவரை என் படைப்புகளை சிறப்பானதாக கொடுத்து வருகிறேன். பெண்கள் வலிமையானவர்கள், அமைதியானவர்கள், சக்தி படைத்தவர்கள் என இப்படி தான் 90 சதவீத பெண்கள் வாழ்க்கை வாழ்கிறார்கள். பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி அதிகம் இருப்பதாக நான் நம்புறேன்..

இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. 50வது படமாக உடன்பிறப்பே அமைந்ததில் சந்தோஷம். சசிகுமார் இந்த படத்தில் மட்டுமல்ல நிஜமாகவே சகோதரன் போல் எனக்கு தெரிந்தார். சமுத்திரகனி கூட வேலை பார்த்தது ஒரு சைக்காலஜி மேட்சிங் மாதிரி இருந்தது. சூரி கூட தான் செட்டில் அதிகமாக பேசினேன். எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்துள்ளார். இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.

-அம்பலவாணன்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

வெள்ளி 8 அக் 2021