மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

தெலுங்கு கற்கும் சிவகார்த்திகேயன்

தெலுங்கு கற்கும் சிவகார்த்திகேயன்

டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கின்றார்.

அவர் முதன்முதலாக தெலுங்கில் நடிக்கும் படத்தை அனுதீப் கே.வி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படம் குறித்து அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் படங்களில் நடிக்க ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் நடிப்பதற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக தெலுங்கு கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது தீவிரமாக தெலுங்கு பேச பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 8 அக் 2021