மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

விஷாலுடன் இணைய வாய்ப்பே இல்லை: மிஷ்கின்

விஷாலுடன் இணைய  வாய்ப்பே இல்லை: மிஷ்கின்

“நடிகர் விஷாலுடன் இணைந்து பணியாற்றுவது இனிமேல் நடக்காது” என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

‘துப்பறிவாளன்-2’ படம் தொடர்பாக அந்தப் படத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகப் பெரிய மோதல், அநாகரிகமான பேச்சுக்கு இட்டுச் சென்றது.

ஒரு பொது மேடையிலேயே மிஷ்கின், விஷாலை கடுமையாக அநாகரிகமாகத் திட்டித் தீர்த்தார். இந்த நிலையில் ‘துப்பறிவாளன்-2’ படத்தை தானே இயக்குவேன் என்று விஷால் சொல்லியிருந்தும், இப்போதுவரை அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதற்கிடையில் விஷாலுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று இயக்குநர் மிஷ்கினிடம் கேட்டதற்கு “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

மிஷ்கின் அளித்த பதிலில், “விஷால் எனக்குத் தம்பி மாதிரிதான். அந்தக் கோபம் நிஜம். தன் கோபத்தால் மதுரையை எரிச்ச கண்ணகி மாதிரி எதுவும் நடக்கலை. அவன் நல்லாயிருக்கணும். ஆனால், அவன்கூட இனிமேல் கலைப் பயணம் இல்லை.

துப்பறிவாளன்-1 படத்தில் பாட்டு வேண்டாம்னு சொன்னதுக்கு சரின்னு சொன்ன பெரிய மனுஷன் அவன். நாங்க இரண்டு பேரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன்கள்தான். அப்படித்தான் இருப்போம். அவன் 40 வருஷம் சினிமாவில் இருப்பான். நல்ல உழைப்பாளி. அவன் என் மேல் வைத்த அன்பையும், நான் அவன் மேல் வைத்த அன்பையும் மறக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

-அம்பலவாணன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 7 அக் 2021