மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

படங்களை வெளியிட தயங்கும் தயாரிப்பாளர்கள்!

படங்களை வெளியிட தயங்கும் தயாரிப்பாளர்கள்!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் கடந்த மாதமே திறக்கப்பட்ட நிலையில் கேரளாவில் மட்டும் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளன.

ஐம்பது சதவீத இருக்கை வசதிகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என கூறினாலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என கேரள அரசு கூறியுள்ளது.

இது நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். அதனால் இந்த சூழ்நிலையில் தங்களது படங்களை வெளியிட தயக்கம் காட்டும் பல தயாரிப்பாளர்கள், யாராவது ஒருவர் முதலில் தங்களது படத்தை வெளியிடட்டும் என்றும் அதில் வரும் லாப நஷ்டங்கள், நடைமுறை சிக்கல்களை கவனித்துக் கொண்டு அதன் பிறகு தங்களது படங்களை வெளியிடலாமா வேண்டாமா என தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என்றாலும் அன்றைய தினம் திங்கள்கிழமை என்பதால் 28 அல்லது 29 தேதிகளில் தான் புதிய படங்கள் வெளியாகும். என்று தெரிகிறது.

அந்த வகையில் முதல் கட்டமாக ஜோசப் மற்றும் ஜகமே தந்திரம் படங்களில் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள. ஸ்டார் என்கிற திரைப்படம் அன்றைய தினம் வெளியாகும் என தெரிகிறது

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 7 அக் 2021