மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

ஒருகோடி பார்வையாளர்களை கடந்த மாநாடு ட்ரெய்லர்!

ஒருகோடி பார்வையாளர்களை கடந்த மாநாடு ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் பன்முக திறமை உள்ள நடிகர் சிலம்பரசன். இயக்கம், நடிப்பு, இசை, பாடல் எழுதுவது, பாடுவது உள்ளிட்ட பல திறமைகள் அவரிடம் உண்டு. அவரது திறமைக்கேற்ற உயரத்தை அவர் இன்னும் அடையவில்லை என்பதுதான் உண்மை.

சிலம்பரசன் நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்கள் எட்டிப் பிடிக்காத சாதனையை அவர் நடித்து தீபாவளிக்கு வர உள்ள 'மாநாடு' ட்ரெய்லர் படைத்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி 'மாநாடு' பட ட்ரெய்லர் யூடியூபில் வெளியானது. நான்கு நாட்களுக்குள்ளாக அந்த ட்ரெய்லர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சிம்பு நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்களில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் ட்ரெய்லருக்குத்தான் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தது.

அந்தப் படத்தில் சிலம்பரசன் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி என மூன்று ஹீரோக்கள். அதனால் அவரின் தனிப்பட்ட சாதனையாக கருத முடியாது

யூடியூப்பில், பிரபலமான கடந்த சில வருடங்களில், சிம்பு தனி நாயகனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய 'அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களின் ட்ரெய்லர்கள் கூட ஒரு கோடி பார்வையைக் கடந்ததில்லை.

மாநாடு படத்தின் ட்ரெய்லருக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள அண்ணாத்த படத்துடன் நேரடி போட்டியில் 'மாநாடு' படம் வெளியாக உள்ளது.

அம்பலவாணன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 7 அக் 2021