மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

நவம்பரில் வாடிவாசல் படப்பிடிப்பு!

நவம்பரில் வாடிவாசல் படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயுதபூஜைக்குப் பிறகு தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

அவர் இப்போது, கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சொந்தத் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ஒரு படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவற்றில் எந்தப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு முதல்பார்வையும் வெளியிடப்பட்ட வாடிவாசல் படப்பிடிப்புக்கு முன்னால் பாலா படம் தொடங்கிவிடும் என்று கூறப்பட்டு வந்தது.

மூன்று மாதங்களில் மொத்தப் படப்பிடிப்பையும் பாலா முடித்துவிடுவார். அதன்பின் வாடிவாசல் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்களாம். ஆனால், திடீர் மாற்றமாக முதலில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க சூர்யா சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். அதனால், நவம்பர் 4 தீபாவளி முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். நவம்பரில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அப்படத்துக்கு இடையிலேயே பாலா இயக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

-அம்பலவாணன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 7 அக் 2021