மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

விஜய்க்கு மகளாக மகேஷ் பாபு மகள்!

விஜய்க்கு மகளாக மகேஷ் பாபு மகள்!

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய்யின் 65ஆவது படத்தின் பணிகளே இன்னும் முடியாத நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன. விஜய்யின் 66ஆவது படத்தை இயக்க பல இயக்குநர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் தெலுங்கு இயக்குநர் வம்சிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் கார்த்தியின் நடிப்பில் வெளியான 'தோழா', மகேஷ் பாபுவின் 'மகரிஷி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குநரும் கூட.

வழக்கமாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், தற்போது குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, விஜய்க்கு மகளாக நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகராகவும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதல் இடத்தில் இருக்கும் மகேஷ் பாபுவுக்குத் தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போன்று ஆந்திராவில் உள்ளனர். அவரது மகள் விஜய் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் அவருடைய ரசிகர்களையும் விஜய் பக்கம் கொண்டுவரும் வியூகமாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 7 அக் 2021