மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

‘ஜெய் பீம்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!

‘ஜெய் பீம்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!

கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கியுள்ள படம், ‘ஜெய் பீம்’. இதில் சூர்யா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படம் இருளர் இன பழங்குடி மக்களைப் பற்றிய உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு இருக்கின்ற முதன்மையான பிரச்சினையே சாதி சான்றிதழ் பெறுவதுதான். மேலும் சாதி சான்றிதழ் இல்லாமல், பழங்குடியின மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்ற அவலம் தொடர்கிறது. அத்துடன் அவர்கள் எப்படி ஏமாற்றபடுகிறார்கள், அவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் என்ன என்பதை திரைக்கதையில் சொல்வதே ‘ஜெய் பீம்’ படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.

சூர்யா இந்தப் படத்தில் பழங்குடி இருளர் சமுதாய மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ஆண்ட பரம்பரை, அடிமை பரம்பரை என்பதை தவிர்த்து, மக்களுக்கான அடிப்படை உரிமையைப் பேசுவதால், இது சினிமாவில் மட்டுமல்ல; தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

இருளர் சமுதாயம் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் ஆழமான அரசியல் பேசும், 164.4 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஜெய் பீம்’ படத்துக்குத் தணிக்கைத் துறை ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

-அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 7 அக் 2021