மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

நிவின்பாலி - அஞ்சலியின் புதிய படம்!

நிவின்பாலி - அஞ்சலியின் புதிய படம்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' படத்தைத் தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ள பெயரிடப்படாத புதிய படத்தை வி.ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி. கற்றது தமிழ் ராம் இயக்கத்தில், கடைசியாக மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது.

பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் கலந்துகொண்டு இந்தப் படம், விமர்சன ரீதியாக அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

பேரன்பு படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாக உள்ளது. ராமின் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிவின் பாலி நடிப்பில் கடைசியாக தமிழில் ரிச்சி படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

புதன் 6 அக் 2021