மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

டி20 உலகக் கோப்பை: 70 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி!

டி20 உலகக் கோப்பை: 70 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி!

அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண 70 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது .

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து 16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தது .

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 70 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது .

ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு முதன்முறையாக சந்திக்க இருக்கின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

-ராஜ்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 6 அக் 2021