மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

ராஜமவுலியால் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிரஞ்சீவி

ராஜமவுலியால் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிரஞ்சீவி

தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படம் 400 கோடி ரூபாய், புஷ்பா 250 கோடி ரூபாய், ஆச்சார்யா 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கொரோனா பொது ஊரடங்கு காரணமாக வெளியிட முடியாமல் முடங்கிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தேங்கி இருந்த திரைப்படங்களை வெளியிடும் வேகம் அதிகரித்துள்ளது.

கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ஆச்சார்யா. அவருடன் ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வருகிற 2021 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட முடிவு செய்திருந்தார் சிரஞ்சீவி.

ஆனால் ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் ராம் சரண் நடித்துள்ளார். இதனால் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளார் சிரஞ்சீவி.

அதாவது கிறிஸ்துமஸ்க்கு வெளியிட்டால் இரண்டே வாரத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும்போது அவர்களுக்கு தியேட்டர் பிரச்சினை ஏற்படும் அல்லது தனது படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் ஒரு வாரம் முன்னதாக டிசம்பர் 17ஆம் தேதியே ஆச்சார்யா படத்தை வெளியிடுகிறார்.

டிசம்பர் 17ஆம் தேதி சிரஞ்சீவியின் ஆச்சார்யா படம் வெளியாகும் அதே நாளில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் முதல் பாகமும் வெளியாகிறது.

-அம்பலவாணன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 6 அக் 2021