மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை அணி!

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை அணி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 51ஆவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று (அக்டோபர் 5) இரவு மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இவின் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் நான்காவது ஓவரில் ஜெய்ஸ்வால் (12) அவுட் ஆன நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன.

அணியில் அதிகபட்சமாக இவின் லீவிஸ் மட்டுமே 24 ரன்கள் அடித்திருந்தார். சஞ்சு சாம்சன் (3), ஷிவம் துபே (3), க்ளென் பிலிப்ஸ் (4) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அணியின் ரன் ரேட் கணிசமாகக் குறைந்தது. டேவிட் மில்லர் 15 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ராகுல் திவாட்டியா 12 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் அரை சதம் அடித்து (50) ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் (13) ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.

மும்பை அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. இதனால், மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று (அக்டோபர் 6) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 52ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 6 அக் 2021