மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

சன்னி லியோன் இனிமையானவர்: சதீஷ்

சன்னி லியோன் இனிமையானவர்: சதீஷ்

இந்தி நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர கதையம்சம் உள்ள தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ள இவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சை இருக்கும். வட இந்தியாவில் சன்னி லியோனின் ஆபாச சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூருவில் புத்தாண்டு நிகழ்ச்சியொன்றில் கவர்ச்சி நடனம் ஆட வந்த அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது புகைப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

தற்போது சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்‘ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் தமிழ் நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பில் சன்னி லியோனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘‘சன்னி லியோன் மிகவும் இனிமையானவர். சிறந்த நடிகை, அற்புதமான டான்சர், மனிதநேயம் மிக்கவர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 5 அக் 2021