மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

ஆறு மணி நேரத்துல அடிச்ச அம்பானி: அப்டேட் குமாரு

ஆறு மணி நேரத்துல அடிச்ச அம்பானி: அப்டேட் குமாரு

நேத்திக்கு நைட் ஆறுமணி நேரம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கெல்லாம் டவுன் ஆயிடுச்சுல்ல. அதனால ஃபேஸ்புக் முதலாளி மார்க்குக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் நட்டமாம். ஆனா பாருங்க, இந்த அர்த்த ராத்திரியிலையும் அம்பானி ஏகப்பட்ட லட்சத்தை அனாமத்தா சம்பாதிரிச்சுருக்காப்ல. எப்படினு கேட்குறீங்களா? ஃபேஸ்புக்கும் வேலை செய்யலை, வாட்ஸ் அப்பும் வேலை செய்யலை ஒருவேளை டேட்டா தீர்ந்துடுச்சோன்னு நினைச்சு பல பேர் நேத்து நைட் அம்பானிக்கு டேட்டா ரீசார்ஜ் பண்ணியிருக்காங்க. அம்பானிக்கு அடிச்ச அதிர்ஷ்டக் காத்தை என்னனு சொல்றது.

நீங்க அப்டேட் பாருங்க

Mannar & company

உப்புமா ஆயுதமாகும் போது, விரதங்கள் கேடயமாகின்றன!

கோழியின் கிறுக்கல்!

கணவன் மனைவிக்கும் இடையே சிறந்த புரிதலின் பொருள்,

'இத இனிமே திருத்த முடியாது' என்பதே!!

மயக்குநன்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது!- ஓபிஎஸ்.

ஆமா தலைவரே... கொஞ்ச நாளா சின்னம்மாவோட ஆடியோ ரிலீஸும் நின்னு போயிடுச்சே..?!

நாகராஜசோழன்.MA.MLA

திமுக ஆட்சி செய்வதால் பெண்கள் சுருக்குப் பையை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்! - அண்ணாமலை

கேஸ்,பெட்ரோல்,டீசல் விக்கர விலை வாசிக்கு அம்மஞ்சல்லி கூட சுருக்கு பையில மிஞ்சாது சார்....

மாஸ்டர் பீஸ்

கையில காசு இருந்தா நல்ல ஒரு மட்டன் பிரியாணி!

காசு கம்மியா இருந்தா இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ!

அவ்வளவுதான் வாழ்க்கை!!!

நாகராஜசோழன்.MA.MLA.

கட்சிக்காக நீண்டகாலம் உழைத்த மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவும் நிறைவேறிவிட்டது!- அன்புமணி.

ஆனா உங்க கனவு பகல் கனவாவே போயிரும் போல இருக்கே தலைவரே!!!

balebalu

ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?

பின்ன என்ன ? வாட்சப், பேஸ் புக் கொஞ்ச நேரம் முடங்கியதால ஓனருக்கு 7 பில்லியன் நஷ்டமாமே ? அப்போ அதிலேயே 24 மணி நேரமும் இருக்கோமே நமக்கெல்லாம் எவ்வளவு நஷ்டம் ன்னு புலம்புறாம்ப்பா

மயக்குநன்

அதிமுகவைத் தொடங்கி 3 முறை முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்!- ஓபிஎஸ்.

நீங்களுமே மும்முறை முதல்வர் பதவி கண்ட நாயகர்தானே தலைவரே..?!

கோழியின் கிறுக்கல்!

ஒரு பிரச்சனை என்று மனைவியிடம் மனம் விட்டு பேசினால்,

அதற்கு பதில் ஆயிரத்து எட்டு புதுப் பிரச்சனைகள் முளைத்து விடும்!!

-லாக் ஆஃப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 5 அக் 2021