மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

விவாகரத்துக்குப் பின் சமந்தா நடிக்கும் படம்!

விவாகரத்துக்குப் பின் சமந்தா நடிக்கும் படம்!

நடிகை சமந்தா இப்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தன் கணவர் நாக சைதன்யாவுடனான திருமண உறவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின், அவர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பார் என்றும் பேசப்பட்டது.

ஆனால், அவர் உடனடியாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சாந்த ரூபன் என்பவருடைய இயக்கத்தில் நடிக்கச் சம்மதம் சொல்லியிருக்கிறாராம் சமந்தா. கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதாலும் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள சாந்த ரூபன் கதை சொன்ன விதமும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்த போதும் அவற்றை மறுத்த சமந்தா, ஒரு புதிய இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது அவர் சார்ந்தோருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 5 அக் 2021