மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

ஜோவுக்குக் கணவனாக இருப்பதில் பெருமை: சூர்யா

ஜோவுக்குக் கணவனாக இருப்பதில் பெருமை: சூர்யா

சூர்யா தயாரிப்பில் அவர் மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘உடன்பிறப்பே’, குடும்ப உறவுகளைப் பற்றி குறிப்பாக அண்ணனுக்கும் கணவனுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட பாசக்கார தங்கையின் தவிப்பைப் பற்றிய கதையாக உருவாகி உள்ளது.

திரையுலக வாழ்க்கையில் ஜோதிகா நடித்திருக்கும் 50ஆவது படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனியும், அண்ணனாக சசிகுமாரும் நடித்துள்ளனர்.

சரவணன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. இது பற்றி சூர்யா பேசும்போது, “1998இல் தரமணி பிலிம் சிட்டியில் இயக்குநர் வசந்த் ஒரு பாறைக்கு அருகில் ஜோதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

வேற ஊர், வேற மொழியைத் தாண்டி இங்கு வந்து நம்மூர் மொழியை கற்று, இந்த மக்கள் மனதுக்குள் அவர் இடம்பிடித்துள்ளார். அவர் ஏன் சில படங்கள் பண்ணினார், பண்ணவில்லை என தெரியவில்லை. வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகளை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்

நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நண்பனாக, கணவனாக ஜோ எனக்குக் கிடைத்ததற்கு நன்றி. ஜோதிகாவின் 50ஆவது படம் உடன்பிறப்பே.

மொத்த படக் குழுவும் உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர். அழகான படம் படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என்றார் சூர்யா.

-அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 5 அக் 2021