மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

அம்மாவுக்குப் பேரனாக நடிக்கும் பிரித்விராஜ்

அம்மாவுக்குப் பேரனாக நடிக்கும்  பிரித்விராஜ்

இந்திய சினிமாவில் மலையாளத் திரையுலகம் முற்றிலும் மாறுபட்டது. பிறர் முயற்சிக்காத, யோசிக்காத செயல்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பார்கள். சொந்த அம்மாவுக்கு அவரது மகனை பேரனாகவும், மகனாகவும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ், ஒரு வாரிசு நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவரது தந்தை மறைந்த சுகுமாரனும் ஒரு நடிகர்தான். அதேபோல் அவரது தாயார் மல்லிகா சுகுமாரனும் கதாநாயகியாக நடித்தவர்தான்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மல்லிகா சுகுமாரன். அந்த வகையில் பிரித்விராஜ் தற்போது மோகன்லாலை வைத்து இரண்டாவதாக இயக்கிவரும் ‘ப்ரோ டாடி’ என்கிற படத்தில் மோகன் லாலின் அம்மாவாக நடிக்கிறார் மல்லிகா சுகுமாரன்.

அதுமட்டுமல்ல; இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரித்விராஜ் அவரது பேரன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க, அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா இணைந்து நடிக்க இருக்கும் ‘கோல்டு’ என்கிற படத்தில் பிரித்விராஜின் அம்மாவாகவே நடிக்கிறார் மல்லிகா சுகுமாரன்.

நிஜத்தில் கதாநாயகிகளாக வலம்வந்த நடிகைகள் திரையில் தங்களது மகனுக்கு அம்மாவாக நடித்ததில்லை. அந்த வகையில் முதன்முதலாக அந்த பெருமையை பெற்றுள்ளனர் நடிகர் பிரித்விராஜும், அவர் அம்மாவும்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 5 அக் 2021