மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

தடுப்பூசி போட்டிருந்தால்தான் தியேட்டருக்குள் அனுமதி!

தடுப்பூசி போட்டிருந்தால்தான் தியேட்டருக்குள் அனுமதி!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதி என்கிற நிபந்தனையுடன் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அதேநேரம் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் தற்போதுதான் ஓரளவு குறைந்து வருவதால் வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்துகொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களை போல 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.

ஆனால், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிபந்தனை என்னவென்றால் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வதற்காக அரசாங்கம் பரிந்துரைத்தபடி இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களை மட்டுமே திரையரங்குக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்ல, தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் அனுமதி என்பதே வழக்கமான வசூலை பாதிக்கும் நடவடிக்கையே. கொரோனா ஊரடங்குக்கு பின் முதன்முறையாக கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்படுகிறது . பார்வையாளர்கள் வருவார்களா 50 சதவிகித இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகுமா என்கிற அச்சத்தில் திரையுலகினர் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே படம் பார்க்க அனுமதி என்றால் எந்த அளவுக்கு மக்கள் படம் பார்க்க வருவார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களில் தடுப்பூசி போட்டவர்களை இனம் கண்டறிந்து தியேட்டருக்குள் அனுமதிப்பது நடைமுறை சாத்தியமா? இந்த நிபந்தனையை மட்டும் தளர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைக்க கேரள தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகமான கொரோனா தொற்று இருக்கும் மாநிலம் கேரளம் என்பது குறிப்பிடத்தக்கது.

-அம்பலவாணன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 5 அக் 2021