மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

அதானியைக் காப்பாற்ற ஷாருக் கான் மகன் பலிகடாவா?

அதானியைக் காப்பாற்ற ஷாருக் கான் மகன் பலிகடாவா?

மும்பையில் நடுக்கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மாடலிங் உலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றிருந்த அந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்தபோது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து 8 பேரைப் பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் உள்ளிட்டோர் மும்பை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வாங்கி ஆய்வு செய்தனர். ஆரியன் யார் யாருடன் பேசினார் என்பது பற்றி விசாரித்தனர். பின்னர் ஆரியன் கான், அர்பாஸ் சேத் மெர்ச்சண்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சிக்கலில் அரசியலும் இருக்கிறதாம். உண்மை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே கப்பலில் இருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில்,

“இந்தி நடிகரின் மகன் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீரென வந்து கப்பலில் போதைப் பொருளைப் பறிமுதல் செய்ததாகக் கூறுகின்றனர்.

அவர்கள் உண்மையான பிரச்சினையை திசை திருப்புகின்றனர். உண்மை பிரச்சினை அதானி

குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் ஆகும்.

அந்த போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டது. இந்த நேரத்தில் அதைப்பற்றி ஊடகத்தினர் ஒளிபரப்புவார்கள் என போதைத் தடுப்புப் பிரிவு இங்கும், அங்கும் சிலரை பிடிக்கின்றனர்.

நீங்கள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் பற்றி எழுதுங்கள். முந்த்ராவில் அதிக அளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அமைதி காப்பது ஏன்?”

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்மூலம் அதானி துறைமுகத்தில் 21,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சிக்கலைத் திசை திருப்பவே ஷாருக் கான் மகன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் முன்னணி நடிகரின் மகனை சிக்கலுக்குள் இழுத்துவிட்டால் ஊடகங்களின் கவனமும் மக்களின் கவனமும் அதில் போய்விடும் என்றும் திட்டமிட்டே இதைச் செய்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 5 அக் 2021