மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவில் தனுஷின் நடிப்பில் வெளியான '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களுக்கு பின் படங்கள் இயக்காமல் இருந்துவந்த ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க உள்ளது. படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக இருக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவும், விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

-அம்பலவாணன்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

திங்கள் 4 அக் 2021