மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

இடி முழக்கம் ரீமேக் படமா?

இடி முழக்கம் ரீமேக் படமா?

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது இயக்கியுள்ள படம் 'இடி முழக்கம்'.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

சீனு ராமசாமி கிராமம் சார்ந்த மனித உணர்வுகளின் பின்னணியில் படம் இயக்குபவர். இடி முழக்கத்தில் முதன்முறையாக ஆக்‌ஷன் கதையைப் படமாக்கியுள்ளார். படத்தின் கதை நடப்பது கிராமத்தில். இந்தக் கதை மலையாள லட்சியம் படத்தின் ரீமேக் எனத் தகவல் பரவியது.

இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இடிமுழக்கம் ரீமேக் படமல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். நன்றி” எனத் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 4 அக் 2021