மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தி பிளேஆஃப்பை உறுதி செய்த பெங்களூரு!

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தி பிளேஆஃப்பை உறுதி செய்த பெங்களூரு!

பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஷார்ஜாவில் நேற்று (அக்டோபர் 3) மாலை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். கோலி 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிய படிக்கல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் சிக்சர்களாக பறக்கவிட்டார். அவர் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 23 ரன்களில் வெளியேற பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஸ்கோர் 10.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது கே.எல்.ராகுல் 35 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரண் 3 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தார்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் அணியால் வெற்றி நோக்கி செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 12 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

-ராஜ்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

திங்கள் 4 அக் 2021