மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

தயாராகும் காமராஜர் பார்ட் 2

தயாராகும் காமராஜர் பார்ட் 2

அரசியல் கட்சித் தலைவர்கள், மறைந்த திரையுலக நட்சத்திரங்கள் வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகிறது. தமிழில் பாரதி, பெரியார், கணித மேதைராமானுஜம் ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஞான ராஜசேகரன் இயக்கத்தில் திரைப்படமாக்கப்பட்டது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை, தலைவி எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு இந்திமொழிகளில் வெளியானது.

காங்கிரஸ்காரர்களால் விழாக்களுக்கும்,மேடைப்பேச்சுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த காமராஜரின் வாழ்க்கையை ரமணா கம்யூனிகேஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் காமராஜ் என்ற பெயரில் படமாகத் தயாரித்து 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார் இயக்குநர் பாலகிருஷ்ணன். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் இவர் இயக்கிய முதல் படம் காமராஜ்.

அந்த திரைப்படத்திற்குத் தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் பெருந்தலைவர் 'காமராஜ் - 2' என்ற பெயரில் தயாராகிறது. காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பைக் காமராஜர் வாழ்ந்த இல்லத்தில் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று ஜி.கே.வாசன் துவங்கி வைத்தார்.

காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடிக்கிறார். மற்றும் தீனா தயாளன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கக் காமராஜர் வாழ்ந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றிய அரசியல்வாதிகள் முகச்சாயல் கொண்ட நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ள படக்குழு, நவம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

-இராமானுஜம்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

திங்கள் 4 அக் 2021