மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

தமிழில் நடிகையாகும் பாடகி நஞ்சியம்மா

தமிழில் நடிகையாகும் பாடகி நஞ்சியம்மா

மலையாள பின்னணி பாடகி நஞ்சியம்மா சீன் நம்பர் 62 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ஐயப்பனும் கோஷியும் படத்தில் அவர் பாடிய ‘கலக்காத’ பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து யூடியூபில் 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.

சீன் நம்பர் 62, திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார். மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.மேலும், பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இதுவரை யாரும் கூற துணியாத கதைக்களத்தில் உருவாகி வருகிறது. திகில் கலந்த கிரைம் திரில்லரான 'சீன் நம்பர் 62 என்கிறார் படத்தின் இயக்குநர்.

'ஆதாம்' திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த 'ஆதாம்' சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'சீன் நம்பர் 62' திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் சீன் நம்பர் 62' படமாக்கப்பட்டுள்ளது.

தமிழில் 'இரட்டையர்' மற்றும் தெலுங்கில் ஓய் இடியட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, 'சீன் நம்பர் 62'-க்கு இசை அமைக்கிறார். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'பாம்பு சட்டை', 'ஜோதி' மற்றும் டைரி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான எஸ்.ஆர்.ராஜா சேதுபதி 'சீன் நம்பர் 62'-ன் எடிட்டர் ஆவார்.

பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை 'மிரட்டல்' செல்வா மற்றும் ஹைப்ரிட் களரி அர்ஜுன் வடிவமைத்துள்ளனர். கலை இயக்கத்தை டி.கே.தினேஷ்குமார் கையாண்டுள்ளார். ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு 'சீன் நம்பர் 62' விரைவில் வெளியாகவுள்ளது.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 3 அக் 2021