மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

சமந்தா - நாகசைதன்யா பிரிவு: நாகர்ஜுனாவின் ட்விட்டர் பதிவு!

சமந்தா - நாகசைதன்யா பிரிவு: நாகர்ஜுனாவின் ட்விட்டர் பதிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இந்தச் செய்தி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கிற கோணத்தில் செய்தியை திரையுலகமும் - ஊடகமும் எதிர்கொண்டது.

திருமணத்துக்குப் பின் சமந்தா நடிப்பதை நாகசைதன்யா குடும்பம் விரும்பவில்லை. கட்டுபாடுகளுக்குள் உட்பட்டு வாழ்வதை சமந்தா விரும்பவில்லை.

திருமணத்துக்குப் பின் ஆண் நடிக்கும்போது, பெண் நடிக்க கூடாதா... ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா என்கிற கேள்வி சமந்தா தரப்பில் எழுப்பபட்டபோது, அதற்கான பதில் நாகர்ஜுனா குடும்பத்திடம் இல்லை. சமாதான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கவில்லை.

விவாகரத்துக்குப் பின் 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக நாகசைதன்யா தரப்பு கூறியதை ஏற்க மறுத்துவிட்டார் சமந்தா என அவரது வட்டாரம் கூறி வருகிறது. என்னுடைய உழைப்பின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் எனக்கு போதுமானது என கூறிவிட்டாராம். இந்த நிலையில் இருவரும் பிரிவதாக ஒரே நேரத்தில் ஒரே மாதிரி அறிவித்தது பற்றி நாகர்ஜுனா கூறியிருப்பதாவது,

“சமந்தாவுக்கும், சைதன்யாவுக்கும் இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நான் இதை மிகுந்த பாரமான மனத்துடன் தெரிவிக்கிறேன். ஒரு கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் முற்றிலும் தனிப்பட்டவை.

சமந்தாவும், சைதன்யாவும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். சமந்தா இந்த வீட்டில் இருந்த நாட்களை, அவர் எங்களுடன் செலவழித்த நேரங்களை நாங்கள் எப்போதும் அன்புடன் நினைவுகூர்வோம்.

சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராகத்தான் இருப்பார். இருவருக்கும் இறைவன் மன வலிமையைத் தரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

-அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 3 அக் 2021