மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

ஐபிஎல்: சென்னையின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்திய ராஜஸ்தான்!

ஐபிஎல்: சென்னையின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்திய ராஜஸ்தான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றியைத் தடுத்து, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (அக்டோபர் 2) இரவு நடைபெற்ற 47ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டு பிளஸ்சிஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரெய்னா 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

அடுத்துவந்த மொயீன் அலி 21 ரன்னிலும், ராயுடு 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தபோதும் மறுமுனையில் தொடக்க வீரர் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 101 ரன்கள் குவித்த கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு உறுதுணையாக 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த ஜடேஜா களத்தில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இயன் லிவிஸ் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.

இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இயன் லிவிஸ் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால், மறுமுனையில் ஜெய்ஷ்வால் அரைசதம் விளாசினார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து கே.எம்.ஆசிப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சஞ்சு சாம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரை சதம் விளாசினார்.

இறுதியில் 17.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.

42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் குவித்த ஷிவம் துபே இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார். பிலிப்ஸ் 14 ரன்னிலும் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

-ராஜ்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

ஞாயிறு 3 அக் 2021