மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

ஐபிஎல்லில் இருந்து விலகிய கிறிஸ் கெயில்... காரணம் என்ன?

ஐபிஎல்லில் இருந்து விலகிய கிறிஸ் கெயில்... காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் விளக்கியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் மட்டும் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்தார். முதல் போட்டியில் 14 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஒரு ரன்னும் எடுத்தார்.

நேற்று (அக்டோபர் 1) நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் விளையாடவில்லை. ஆனால், கெயில் இல்லாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தியுள்ளது. மேலும், லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனிவரும் போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது..

இந்த நிலையில் கெயில் விலகியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. தான் இந்தத் தொடரில் விலகியதற்கான காரணத்தை கெயில் விளக்கியுள்ளார், "தொடர்ந்து கடந்த சில மாதங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணி, கரீபியன் பிரிமியர் லீக் தொடர், ஐபிஎல் தொடரில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்குள் (பயோ-பபுள்) இருந்துள்ளதால் மனரீதியில் புத்துணர்வு பெற முடிவு செய்துள்ளேன்.

மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த உள்ளேன். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். ஓய்வு எடுக்க இருக்கிறேன். இதற்கான நேரத்தைக் கொடுத்த பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அணிக்கு என்னுடைய வாழ்த்து மற்றும் நம்பிக்கையை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

புள்ளி பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது பஞ்சாப் அணிக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 2 அக் 2021