மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் வேண்டாம்: பிரகாஷ்ராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் வேண்டாம்: பிரகாஷ்ராஜ்

தெலுங்கு நடிகர் சங்கமான 'மா' சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். பிரகாஷ் ராஜ் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவரல்ல; அவர் ஒரு கன்னடர் என ஆரம்பத்திலிருந்தே எதிரணியினர் அவரைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் தெலுங்கர் அல்லதான். கர்நாடகாவில் பிறந்தவன்தான். ஆனால், தெலுங்கு மாநிலங்களில்தான் நடிகராக வளர்ந்தவன். 9 நந்தி விருதுகள், 2 தேசிய விருதுகள் என்னிடம் உள்ளன.

எதிரணியினரிடம் இத்தனை விருதுகள் உள்ளதா ?. தெலுங்கு மொழி பற்றி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். எதிரணியில் உள்ளவர்கள் இது குறித்து என்னுடன் போட்டி போட முடியுமா ?என்றும் சவால் விட்டுள்ளார்.

மேலும், எதிரணியினர் தேவையில்லாமல் தெலுங்கு மாநிலங்களின் இரு முதல்வர்களையும் இந்தத் தேர்தலில் இழுக்கின்றனர். அவர்கள் இருவருமே மிகவும் பிஸியாக உள்ளனர்.

அவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களைத் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்,” என்றும் குற்றம் சாட்டுகிறார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 2 அக் 2021