மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

போட்டிகளுடன் வெளியாகும் ஆர்ஆர்ஆர்

போட்டிகளுடன் வெளியாகும் ஆர்ஆர்ஆர்

கொரேனா ஊரடங்கு எல்லா தொழில்களையும் முடக்கியது போன்று சினிமா வெளியீடுகளையும் முடங்க காரணமானது. படம் முழுமையடைந்தும் திரையரங்குகள் திறக்கப்படாததால் சுமார் 500 திரைப்படங்கள் வரை வெளியீட்டுக்காக காத்திருந்தன.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியீட்டு தேதியை தீர்மானிக்க முடியாமல் தவித்து வருகின்றன. அதனால் 2022ம் ஆண்டு முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீசுக்கு வரிசையில் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழைப் பொறுத்தவரையில் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்குமார் நடிக்கும் 'வலிமை' படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற படங்களைப் பற்றிய அறிவிப்புகளும் இந்த மாதத்தில் வெளியாகலாம்

தெலுங்கில் பொங்கலுக்கு சில முக்கிய படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருந்தனர் இப்போது அந்தப் போட்டியில் ‘ஆர்ஆர்ஆர்' படமும் நுழைய உள்ளதால் மற்ற படங்கள் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 13ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஆர்ஆர்ஆர்' படம் இப்போது நேரடியாக 'ராதே ஷ்யாம்' படத்துடன் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.

இந்த இரண்டு பெரிய படங்களும் வருவதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மற்ற தெலுங்குப் படங்களான மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா', பவன் கல்யாண் நடிக்கும் 'பீம்ல நாயக்' ஆகிய படங்களின் வெளியீட்டு தேதியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

2022அக்டோபர் என திட்டமிட்டுவிட்டு இப்போது ஜனவரியில் வெளிவர முடிவு செய்திருக்கும் ‘ஆர்ஆர்ஆர்' பட குழுவினரின் இந்த முடிவு மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 2 அக் 2021