மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

ஆடை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை: அமலா பால்

ஆடை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை: அமலா பால்

நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் காட்சியில் நடித்தவர். நடிகை என்று வந்த பின் காட்சிக்கு என்ன தேவையோ அதற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பவர் அமலா பால்.

ஆடை படத்துக்குப் பின் தமிழில் சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைப்படத் துறை முடங்கியதால் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. அப்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நடிகைகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்

சமீப காலங்களாக உச்சக்கட்ட ஆடை குறைந்த புகைப்படங்களை கொரோனா காலம் போன்று வெளியிட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அமலா பால் வெளியிட்டு வருகிறார்.

அதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்துபோவது அவர் வழக்கம். இந்த நிலையில் அவர் பிகினி அணிந்து கடற்கரையோரம் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, அமலா பாலின் ஃபிட்னஸ் பற்றி பேசினார்கள். மற்றவர்கள் அவரை கிண்டல் செய்தார்கள்.

இந்த நிலையில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அமலா பால்.

அவர் கூறியிருப்பதாவது... “அவள் தான் விரும்பியபடி வாழ்வாள். அதனால் சமூக வலைதளங்களில் பெண்களைக் குறிவைப்பதை நிறுத்தவும். ஒரு பெண் தன் விருப்பப்படி உடை அணிவாள். அவளின் உடை பற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 1 அக் 2021