மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

ஹைதராபாத்தை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்த சென்னை!

ஹைதராபாத்தை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்த சென்னை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றில் நுழைந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதை அடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா களமிறங்கினர். ஜேசன் ராய் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசில்வுட் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் சஹா அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் வெளியேறினார்.

இறுதியில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அந்த அணியின் ஹேசில்வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளசிஸ் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 38 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த மொயீன் அலி 17 ரன்னில் ரஷீத் கான் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய டுபிளசிஸ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய அம்பதி ராய்டு மற்றும் கேப்டன் டோனி சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் 19.4 ஓவரில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 139 ரன்கள் எடுத்தது.

அம்பதி ராயுடு 17 ரன்னிலும், கேப்டன் டோனி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஹைதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிளேஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.

துபாயில் நடக்கும் இன்றைய (அக்டோபர் 1) 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 1 அக் 2021