ஐபிஎல்: ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டங்கள்… காரணம் என்ன?

entertainment

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற இருக்கின்றன.

ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கின்றன. கடைசி நாளான 8ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

முதல் போட்டி அபுதாபியில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகளும், துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

தற்போது இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில், அதாவது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றத்துக்குப் புள்ளிப்பட்டியல் கணக்குகள்தான் காரணம் என்று தெரிகிறது. பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு வெற்றி தோல்விகளை தாண்டி, நெட் ரன் ரேட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கடைசி போட்டியில் விளையாடும் அணி, முந்தைய போட்டியின் முடிவை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டுவிடும் என்பதால் அப்படிப்பட்ட கூடுதல் பலனை அடையாமல் இருப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் ஏதாவது ஒரு போட்டியை மட்டுமே நேரலையாகப் பார்த்து ரசிக்க முடியும்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *